திருச்சி NIT யில் ராகிங்

தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களின் விருப்பப் பட்டியலில் இருக்கும் கல்லூரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். சென்னை ஐஐடி, அண்ணா பொறியியல் கல்லூரி, திருச்சி NIT (REC) போன்றவை பட்டியலில் முதலில் இருக்கும் கல்லூரிகள்.

திருச்சி NIT யில் படிக்கும் மாணவர்கள் நிம்மதியாக படிக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும். முதல் வருடம் சேரும் மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் கொடுக்கும் டார்ச்சர் மிக அதிகம்.

சீனியர் மாணவர்கள் தாங்கள் ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தது போல் ஜூனியர் மாணவர்களை அடிமைகள் போல் நட்த்துகிறார்கள். ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் வகுப்பறைக்கு வந்து சீனியர் மாணவர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதும் அவர்கள் மனம் நோகும் படியாக நடந்து கொள்வதும் என்று கொஞ்சம் கூட மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். புதிதாக வரும் மாணவிகளிடம் சீனியர் மாணவிகள் செய்யும் டார்ச்சர்களால் அவர்கள் எதிரிலேயே அழுது விடுவதும் உண்டு அப்பொழுதும் அவர்கள் மீது அவர்களுக்கு இரக்கம் வருவதில்லை.

ராகிங்கால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் விஷயம் உங்கள் பார்வைக்கு.

உனக்கு REC la சீட்டு கிடைச்சிடுச்சி

என்று ISD போட்டு தங்கைக்கு சொன்னபோது நானும் அவளும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நீதான் REC ல படிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்ட இப்ப உன் தங்கை படிக்கப் போறா, என்று சித்தப்பா தன் மகளைப் பற்றி தொலைபேசியில் பெருமைப் பட்டுக்கொண்டார்.

கிட்டதட்ட அந்த வாரம் முழுவதுமே மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க என்று அலுவலகத்தில் எல்லோரும் வினவ, என் தங்கச்சிக்கு REC la சீட்டு கிடைச்சிடுச்சி என்று சொல்ல திரு திருவென்று விழித்தார்கள். பிறகு சுதாரித்துக் கொண்டு ஆங்கிலத்தில் விளக்கினேன்.

கல்லூரிக்கு சென்று அட்மிஷன் போட்டதும் "காலேஜில் சேர்ந்து விட்டேன், ஹாஸ்டலில் இருக்கப் போகிறேன்" என்று சித்தப்பா செல்லில் இருந்து மெசேஜ் வந்த்து.

வேலை அதிகமா இருந்ததால், ஊரில் பதினைந்து நாட்களா யாருக்கும் போனில் பேசவில்லை. வெள்ளி விடுமுறை என்பதால் ஊருக்கு போன் செய்தேன், ******** எப்படி ஹாஸ்டல்ல இருக்குன்னு கேட்க சித்தப்பா வீட்டுக்கு போன் செய்தேன்.

ரிசீவரை எடுத்து ******** ஹலோ என்று சொல்ல, அதிர்ச்சியாக இருந்தது.

ஏய் என்ன காலேஜு லீவா வெள்ளிக் கிழமை வீட்ல இருக்க. . . .

இல்லண்ண காலேஜ்லேர்ந்து வந்துட்டேன், எனக்கு அங்க சுத்தமா புடிக்கல. . . .

ஏன் என்ன ஆச்சு. ?

இல்ல சீனியர் எல்லாம் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க, எனக்கு அங்க படிக்கவே புடிக்கல
அதான் TC வாங்கிட்டு வந்துட்டேன். . . .

என்று ஆழத்தொடங்கினாள். . . .

என்ன TC வாங்கிட்டு வந்திட்டியா. . . .?

என்று நான் கேட்டதற்கு பதில் ஒன்று சொல்லாமல் அழுது கொண்டிருந்தவளிடம் இருந்து ரிசீவரை வாங்கி சித்தப்பா போசினார். நடந்த விஷயங்களை விபரமாக கூறினார்.

தொடரும் . . . . . .

------------------------------------------------------

ராகிங் என்ற பெயரில் ஒரு சக மாணவியை டார்ச்சர் செய்து அவள் எதிர்காலத்தையே நாசமாக்கி விட்டீர்களே, நீங்கெல்லாம் மனிதப் பிறவிகள் தானா. . . . . ?

ராகிங் செய்வது சட்டப் படி தவறு. அதை பல கல்லூரிகள் தடை செய்து விட்டன. மாண்வர்களை ராகிங் செய்யாமல் தடுக்க கல்லூரி பல முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது.
நானும் கிட்டத்தட்ட 5 வருட் காலம் கல்லூரியில் படித்திருக்க்றேன். ராகிங் என்ற ஒன்று அங்கு கிடையவே கிடையாது.

NIT கல்லூரி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. நாவரசு விவகாரம் போல் பெரிதாக நடந்தால் தான் இவர்களுக்கு புத்தி வரும் போலிர்ருக்கிறது . . . . .

என்ன நிர்வாகமோ, என்ன கல்லூரியோ. . . . . ?

10 comments:

said...

Raggins is acceptable if done in the right spirit. I have experience too. If someone cannot withstand the few harsh words that senior(s) throw at them, then s/he doesn't qualify to study and then face the outside world that is harsh in every sense. Don't question the college administration - you should be mature enough to handle this yourself.

said...

சீனியர்னா கொம்பா முளைச்சிருக்கு.
ஜூனியர்னா என்ன அடிமையா. . .?

எங்களுக்கும் சீனியர்கள் இருந்திருக்காங்க

நானும் சீனியரா இருந்திருக்கிறேன்.

ராகிங் செய்வது சட்டப்படி தவறு, அது சிறியதோ பெரியதோ. நிர்வாகத்தை கேள்வி கேட்காம காலேஜ் வாட்ச் மேனயா கேள்வி கேட்க முடியும் ?

See this.
http://satrumun.blogspot.com/2007/08/blog-post_6819.html

said...

/// few harsh words

Can you please tell me what are all the words comes under the "few harsh words" category.

/// s/he doesn't qualify to study

Then the college should mention the ragging terms and conditions in the application form

said...

ராகிங் கொடுமை கண்டிப்பாக தடுக்கப்படவேண்டியது.

இன்றைய செய்தி:
ராகிங்: மாணவியை நிர்வாணமாக்கிய மாணவிகள்

ஆகஸ்ட் 28, 2007

டேராடூன்: முதலாமாண்டு மாணவியை நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து கொடுமைபடுத்தியுள்ளனர் சீனியர் மாணவிகள்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேசிய மாணவர் படை பயிற்சி (என்.சி.சி) முகாம் சமீபத்தில் நடைபெற்றது. 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த முகாமில், டேராடூனில் உள்ள கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் பங்கேற்றார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த மாணவி ரிக்ஷா தொழிலாளியின் மகள். இந்த மாணவியை பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சீனியர் மாணவிகள் சிலர் சேர்ந்து ராக்கிங் செய்துள்ளனர். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவிகள் ஒன்று சேர்ந்து அவரை கடுமையாக திட்டியதோடு வலுக்கட்டாயமாக நிர்வாண நிலையில் நிற்க வைத்துள்ளனர்.

இதனால் அந்த மாணவி மன நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்பு இந்த சம்பவத்தை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

எனது மகள் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக தான் இதுவரை புகார் கொடுக்கவில்லை என்று அந்த மாணவியின் தாயார் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து என்.சி.சி முகாம் நிர்வாகிகள் கூறுகையில்,

என்.சி.சி பயிற்சியின் போது அந்த மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ராக்கிங் நடந்திருக்கலாம். அதனை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


நன்றி : சற்று முன் http://satrumun.blogspot.com/2007/08/blog-post_6819.html

said...

வருகைக்கு நன்றி மஞ்சூர் ராஜா.

தங்கள் தந்த செய்தியை நானும் படித்தேன், கல்லூரி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம்.

Anonymous said...

////few harsh words that senior(s) throw at them

ஏன் சீனியர் மாணவர்களுக்கு மனிதத் தன்மை கிடையாதா. அன்பாக பேசத்தெரியாதா?

Anonymous said...

as you told getting BE seat in NIT is a kuthira kombu..
but when i read ur sister got TC back.. really kodumai ppa

if it continues like this, what is the solution..
is there no other go..
who is responsible for this

who is the sufferer, admn.? no a student... her career

said...

அன்னானி நண்பரே தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

நீங்கள் சொல்வது உண்மைதான், இன்றளவும் ராகிங் கொடுமைகள் கல்லூரிகளில் நடந்து வருவது கவலை தருகிறது. இதனால் மாணவர்களின் உடல் நிலையும் மன நிலையும் பாதிக்கப் படுகிறது என்பதை நிர்வாகம் உணரவேண்டும்.

Anonymous said...

its really sorry to read this..but..i had the same type of ragging in 1981 when i entered madurai medical college...as a first yaer mbbs student..i was forced to stand naked for a whole night..but somehow..i got through...the system is still at fault...

said...

அனானியாக பின்னூட்டம் இடட நண்பருக்கு நன்றி.

இந்த ராகிங் கொடுமையால் பெரிய இழப்புகளை நாம் அடைந்திருந்த போதும் கல்லூரிகளின் மெத்தனப் போக்கு பல மாணவர்களின் வாழ்க்கையை பாழாக்குகிறது.

///// the system is still at fault...
உண்மையே